“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்!!

“ஒன்றிணைந்து செயற்படுவோம்” மாவீரர் முன் உறுதியெடுத்து ஒன்றிணைந்த போராளிகள்.. சுவிசில் புதிய திருப்பம்!!

“தமிழ் மக்களின் விடுதலைக்காக, நமக்கிடையில் இருக்கும் கருத்து முரண்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, ஒன்றிணைந்து செயற்படுவோம்” என வெவ்வேறு தளங்களில் செயற்பட்டுக்கொண்டிருந்த, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள், மாவீரர்கள் வீரவணக்க நிகழ்வில் வைத்து, உறுதியெடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிகழ்வைக் கண்ணுற்ற தமிழ் மக்கள் கண்ணீர் மல்க கரகோசம் செய்து, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். 19/09/2021 அன்று மாலை,  சுவிட்சர்லாந்து நாட்டின் Zürcherstasse, Neuenhof எனும் இடத்தில், சிறப்பாக ஒழுங்கு படுத்தப் பட்டிருந்த, இறுதி யுத்த மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுக்காக, பெருமளவு பொதுமக்களும், தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களும், வெவ்வேறு...

டென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.

டென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் செயற்பாட்டாளர்களும் மக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நினைவு வணக்கத்தினை தொடர்ந்து அனைத்துலக தொடர்பகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு தொடர்பாக அதன் பொறுப்பாளர் திரு. செ.தாசன் அவர்கள் கலந்து கொண்ட மக்களுக்கும் செயற்பாட்டாளர்களும் எடுத்துக்கூறினார். அனைத்துலக தொடர்பகத்தின் டென்மார்க் கிளை செயற்பாட்டாளர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு சீரமைப்பு தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்தார்.

அனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம்.

அனைத்துலக தொடர்பக இத்தாலி கிளைக்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு நியமனம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பக இத்தாலி கிளையின் பொறுப்பாளர் அமைப்பின் ஒழுங்கிற்குள் உட்படாது தனித்து செயல்படுவதால் அனைத்துலக தொடர்பகத்தின் கிளைக்கட்டமைப்பை ஒழுங்கமைப்பதற்காக இத்தாலி நாட்டிற்கான இணைப்பாளராக திரு.நா.சங்கர்பாபு அவர்களை நியமித்துள்ளதாக அனைத்துலக தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளர் திரு. செ.தாசன் அவர்கள் வெளியிட்டுள்ள இணைப்பாளர் நியமனம் தொடர்பான அறிக்கையில் இணைப்பாளர் திரு.நா.சங்கர்பாபு அவர்களை ஏற்றுக்கொண்டு இத்தாலி நாட்டின் மாநிலப்பொறுப்பாளர்கள், கட்டமைப்புச்சார் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்து இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட கிளைக் கட்டமைப்பைப் பலப்படுத்தி அமைப்பின் ஒழுங்கிற்குள்...

ரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.

ரணஸ் நகரில் நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் டென்மார்க் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ரணஸ் நகரத்தில் Vestergade 15, 8900 Randers என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெற இருக்கும் நினைவு வணக்க நிகழ்வைத் தொடர்ந்து அனைத்துலக தொடர்பகத்தில் மேற்கொள்ளபட்டுவரும் சீரமைப்பு தொடர்பான மக்கள் சந்திப்பும் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்துலக தொடர்பகத்தின் கிளைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்புக்களை தொடர்ந்து, டென்மார்க் கிளையிலும்...

இறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு.

இறுதிப்போரின் காவியச்சமர்க்கள நாயகர்களுக்கு சுவிசில் வீரவணக்க நிகழ்வு.

வன்னி இறுதிப்போரில் வீரகாவியமான மாவீரர்களில், உறுதிசெய்யப்பட்ட ஒரு தொகுதி மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் 19/09/2021 அன்று சுவிஸ் நாட்டில், AULA SAAL ,Zűrcherstrasse 107, 5432 Neuenhof என்ற முகவரியில், 14.00-17.30 மணிவரை நடைபெறவுள்ளது. விடுதலைப்புலிகளின் போராளிகள் கட்டமைப்பும்,  சுவிஸ் தமிழ் அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கும் இந்நிகழ்வு தொடர்பில், போராளிகள் கட்டமைப்பு சார்பில் பேசவல்லவரான திரு.பொன் நாயகன் தெரிவிக்கையில் , இறுதிப்போரின் காவியநாயகர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது தமிழ்மக்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமை எனவும், இந்நிகழ்வில் எல்லோரையும் இணைந்து கொள்ளுமாறும் உரிமையுடன் அழைப்பு விடுத்துள்ளார்....

நெதர்லாந்து, பிரான்சு புதிய இணைப்பாளர்கள் நியமனம்.

நெதர்லாந்து, பிரான்சு புதிய இணைப்பாளர்கள் நியமனம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டுவருவதால் அதன் நிர்வாக கட்டமைப்பில் பல மாற்றங்கள் நடைபெற்றுவருவதாக தெரியவந்துள்ளது. அனைத்துலக தொடர்பகத்தில் இருந்து திரு. சந்தோஸ், திரு. மகேஸ் மற்றும் திரு. சசி என பலரும் தமது பொறுப்புகளில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டுளார்கள். நெதர்லாந்து இணைப்பாளராக இருந்த திரு.ஆ.ஜெயா அவர்கள் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இணைப்பாளராக திரு. அருள்நேசன் அவர்களும், பிரான்சு இணைப்பாளராக திரு. சு.ஜோதி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக தொடர்பகம் அறிவித்துள்ளது. “இவ் இணைப்பாளர்களை ஏற்றுக்கொண்டு கிளைப் பொறுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள்,...

சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா! மருத்துமனையில் அனுமதி

சிவாஜிலிங்கத்திற்கு கொரோனா! மருத்துமனையில் அனுமதி

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளாார். இந்நிலையில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு இன்று சனிக்கிழமை முற்பகல் 11 சென்ற அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுத்திப்படுத்தப்பட்டது . அதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்ற அடிப்படையில் எம்.கே.சிவாஜிலிங்கம் அம்புலன்ஸில் கோப்பாய் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழ் தேசிய கட்சியின் பொதுச்...

மறுசீரமைக்கப்படும் அனைத்துலக தொடர்பகம்

மறுசீரமைக்கப்படும் அனைத்துலக தொடர்பகம்

விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்காமல் தன்னிச்சையாக செயற்பட்டு வந்த சந்தோஸ் மற்றும் மகேஸ் அனைத்துலக தொடர்பக பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டதையும் மீறி செயல்படுவதாக தமிழீழவிடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளர் திரு. தாசன் அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சந்தோஸ் மற்றும் மகேஸ் இருவரும் அமைப்பின் ஆவணங்களை புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்க மறுத்து வருவதுடன் அமைப்பின் மீது அவதூறுகளையும் பரப்பிவருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சிறிலங்கா அரசு மேற்கொண்ட போற்குற்றமீறல்கள் மீதான விசாரணைகளை வலுவிழக்கச் செய்யகூடியதாக காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளை வீரச்சாவடைந்த...

நெதர்லாந்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

நெதர்லாந்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!

நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் (bulb company) கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி காலை விபத்து இடம்பெற்றது என்ற தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் இருபாலையைச் சொந்த இடமாகக் கொண்டவரும் நெதர்லாந்தில் நீண்டகாலம் வசித்தவருமான தெய்வேந்திரம் ரவீந்திரன் (வயது-54) என்ற இரண்டு பிள்ளைகளது தந்தையே உயிரிழந்தவராவார். பூந்தோட்ட மண்ணை நிரப்பும் பாரிய கொள்கலன் ஒன்றில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் சிக்குண்டு...

தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையில் பிரதான மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் அல்லது தம்பி அப்பா என்றழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். ஆங்கில, சிங்கள மொழிகளில் நன்கு புலமைபெற்ற ஜோர்ஜ் மாஸ்டர், கடந்த 1936 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.  ஆரம்பத்தில் தபாலதிபராக பணியாற்றிய நிலையில், பின்னர் 1994 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறையினருடன் இணைந்து மொழிபெயர்ப்புத் துறையில் செயற்பட்டு வந்தார். இலங்கை அரசாங்கத்துடன் சர்வதேச நாடுகள் முன்னிலையில் நடைபெற்ற...